காவேரி கரையோரங்களில் வெள்ள பெருக்கு - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 04, 2022 09:57 AM GMT
Report

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 

இதையடுத்து 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

கன மழை காரணமாக காவேரி கரையோரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

M K Stalin

இந்த நிலையில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நடந்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

முதலமைச்சர் அறிவுறுத்தல் 

காரையோரங்களில் வசிக்க கூடிய பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாம்களில் தங்கவைக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் உடனடியாக கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணைகளில் இருந்து தண்ணீர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விட கூடாது என்றும், தண்ணீர் திறப்பு குறித்தான அறிவிப்பை மக்களுக்கு முறையாக தெரியபடுத்த வேண்டும்.

மேலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40ல் இருந்து 50 கி.மீ வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆலேசானைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.