தோடர் இன பெண்களுடன் நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin
By Thahir May 20, 2022 02:28 AM GMT
Report

தோடர் இன பெண்களுடன் நடினம் ஆடி முதலமைச்சர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி, ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் இருந்து புறப்பட்டு வேன் மூலம் ஊட்டிக்கு சென்றார்.

தோடர் இன பெண்களுடன் நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Chief Minister Mk Stalin Dancing With Todar Women

குன்னுாரில் திறந்த வேனில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நலத்திட்டங்கள் நிறைவேற்றம் நீலகிரி மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களிடம் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.

நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உறவோடு தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தீர்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தற்போது ஆட்சி செய்து வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத நலத்திட்டங்களை ஒரே ஆண்டில் செய்து உள்ளோம். குறிப்பாக, பெண்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி கொண்டு வருகிறோம்.

வீடு தேடி வரும் கல்வித்திட்டம், மருத்துவ வசதி உள்பட பல்வேறு திட்டங்களை இந்த ஒரே ஆண்டில் நிறைவேற்றி இருக்கிறோம் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி தமிழகம் மாளிகைக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அப்போது செல்லும் வழியில் தோடர் மந்துவில் தோடர் இன மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

தோடர் இன பெண்களுடன் நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Chief Minister Mk Stalin Dancing With Todar Women

மேலும், அவருக்கு சால்வையை பரிசாக வழங்கினார். அப்போது தோடர் இன மக்களுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார்.

இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தோடர் இன பெண்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.