14 ஆம் தேதி அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம்

chief minister Meeting Amit Shah Conducting
By Thahir Nov 06, 2021 12:43 PM GMT
Report

வரும் 14-ந்தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதே இம்மண்டலக் குழுக்களின் பணியாகும்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், வரும் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களும் கலந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலங்களுக்கு இடையே சுமுக உறவை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள இந்தியாவில் மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சார்பாக இந்த குழுவில் உறுப்பினராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது கூடுதல் உறுப்பினர்களாக உள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்களில் உதவி மையங்கள், மருத்துவ மையங்கள், பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.