மலையாளத்தில் பேசி அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
மனோராமா நியூஸ் நடத்திய கான்க்லேவ் கருத்தரங்க நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் தனது உரையை தொடங்கினார்.
மலையாளத்தில் பேசிய முதலமைச்சர்
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மலையாள மொழிகள் இடையே ஆழமான உறவு உள்ளது. பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ,
மொழி வாரி மாநிலங்களை முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கி கொடுத்தார். கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் மாநிலங்களையும் காப்பதே நாட்டை காப்பதற்கான அர்த்தம். மக்களின் அன்றாட தேவைகளை பார்த்து நிறைவேற்றுவது மாநில அரசு தான்.
மாநில அரசுகள் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே நாடு வலிமை பெறும். வலுவான மாநிலங்கள் மத்திய அரசுக்கு பலம் தானே தவிர பலவீனம் அல்ல என்று தெரிவித்தார்.