சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
கடந்த 2021-ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிக்கும் வண்ணம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்! Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம்.
இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார். அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2023
Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென #இன்னுயிர்காப்போம் திட்டம் தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார்.
அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன். pic.twitter.com/iuuzbQKM2P