பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : காரணம் என்ன ?
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் :
பிரதமருக்கு நன்றி
தங்களது திறமைகளை விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்த கேலோ இந்தியா நிகழ்வு தளமாக அமையும். பிரதமரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி கோரிக்கை வைத்திருந்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
I thank Hon'ble PM Thiru @NarendraModi Avl for having accepted my request to host the #KheloIndia Games 2023 in Tamil Nadu. These games will serve as a platform for young sportspersons from all Indian states to showcase their sporting skills. As everyone witnessed during the 44th…
— M.K.Stalin (@mkstalin) May 27, 2023
தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நடத்தப்படும். செஸ் ஒலிம்பியாட் போல் பிரம்மாண்டமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.