முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
M K Stalin
Madurai
By Thahir
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்விற்காக மதுரை செல்கிறார்.
முதலமைச்சர் மதுரை பயணம்
தென்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்விற்காக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட வளர்ச்சி பணி, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கள ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தென்மண்டல ஐஜி, மதுரை காவல் ஆணையர், டிஐஜிக்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.