ஈஸ்டர் திருநாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Easter M K Stalin DMK
By Thahir Apr 09, 2023 06:47 AM GMT
Report

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதலமைச்சர் வாழ்த்து 

இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்,

chief-minister-m-k-stalin-s-easter-wishes

உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.