சிபிஐ, அமலாக்கத்துறைகளை பயன்படுத்தி மத்தியஅரசு பழி வாங்குகின்றது : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

M K Stalin DMK
By Irumporai Jun 01, 2023 03:30 AM GMT
Report

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் பயணம் 

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில் சென்னை திரும்பியுள்ளார்.

சிபிஐ, அமலாக்கத்துறைகளை பயன்படுத்தி மத்தியஅரசு பழி வாங்குகின்றது : முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் | Chief Minister M K Stalin Returned To Chennai

அச்சுறுத்தும் மத்திய அரசு

 இந்த பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின் அளித்த செய்தியாளர்கள் சந்திபில் ரூ.3000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈர்க்க திட்டமிட்டதாகவும்.ஆனால் 3,233 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொடர்ந்து அமலாக்கதுறை சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறைகளை பயன்படுத்தி பல மாநிலங்களில் பழிவாங்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களை ஒன்றிய அரசு செய்து வருகிறது. தற்போது அதனை தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் திமுக முழு அளவில் ஈடுபடும் என்றும், ஜுன் 12ம் தேதி பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்