மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி

M K Stalin Tamil nadu Viral Video Madurai Chief Minister of Tamil Nadu
By DHUSHI Jun 17, 2025 10:49 AM GMT
Report

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி முடியவில்லை.

எய்ம்ஸ் வெளியிட்ட காணொளி

 இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி காணொளியொன்று இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும் அடுத்து வரும் 2027ம் ஆண்டுக்குள் 2 ஆம் கட்ட பணிகள் முடிவடையும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி | Chief Minister M K Stalin Question Madurai Aiims

தமிழக முதலமைச்சர் தரமான கேள்வி

காணொளியை பார்த்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி | Chief Minister M K Stalin Question Madurai Aiims

அதில், “மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் 2026 தேர்தலுக்கு இந்த ஒரு காணொளி போதும் என நினைத்து விட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகி விட்டன.” என குறிப்பிட்டுள்ளார்.