தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் குறித்தும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போக்சோ வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலேசானை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இணைய வழி குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்தல், போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், மாநகர ஆணையர்கள் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகளும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.