எப்போதும் தொடர்ந்து சிக்சர் அடிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் உதயநிதி புகழாரம்
தொடர்ந்து சிக்சர் அடித்து சாதனை படைப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார்.
சிக்ஸர் அடிப்பது
இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் எந்த பந்தை அடிக்கணும், எந்த பந்தை அடிக்கக் கூடாது என சொல்லிக் கொடுத்தவர் எங்கள் முதலமைச்சர்.

தொடர் சிக்சர் அடித்து சாதனை
அதே போல் டிபென்ஸ் ஆட வேண்டும், எப்போது அடித்து ஆட வேண்டுமென எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நேற்று ஒரு சிக்சரும், டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் ஒரு சிக்சர் என தொடர்ந்து சிக்சர் அடித்து வருகின்றார் முதலமைச்சர்.
கலைஞர் எந்த இடத்தில் அமர்ந்து விளையாட்டை பார்த்து ரசித்தாரோ அதே இடத்தில் காலரி அமைத்து, அதற்கு கலைஞர் பெயரை வைத்து பெருமை சேர்த்துள்ளார் என கூறினார்.