இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Narendra Modi Delhi
By Thahir Aug 16, 2022 03:10 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் வரும் இன்று (ஆகஸ்ட் 16- ஆம் தேதி) டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

டெல்லி செல்லும் முதலமைச்சர் 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வரும் ஆகஸ்ட் இன்று (16 ஆம் தேதி) டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Chief Minister M K Stalin Is Going To Delhi Today

அதன்படி, டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றித் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் அளிக்கவும் தாகவும் கூறப்படுகிறது.

மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார்.