கர்நாடக பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

M K Stalin DMK
By Irumporai May 18, 2023 10:41 AM GMT
Report

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக முதலமைச்சர் யார் என இழுபறி நீடித்து வந்த நிலையில் , கர்நாடக முதலமைச்சராக சித்தாராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.

இந்த நிலையில் நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாயிருந்தது.

கர்நாடக பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு | Chief Minister M K Stalin For The Ceremony

ஸ்டாலினுக்கு அழைப்பு

பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சித்தராமையா தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.