முதலமைச்சர் பிறந்த நாள் : பிரதமர் ஆளுநர் வாழ்த்து

M K Stalin DMK Narendra Modi
By Irumporai Mar 01, 2023 06:22 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் வாழ்த்து

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் :

70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பிறந்த நாள் : பிரதமர் ஆளுநர் வாழ்த்து | Chief Minister M K Stalin Celebrated His Birthday

பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்டுள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.