2-வது முறை கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்கிறார்!
கேரள முதல்வராக பினராயி விஜயன் 2-வது முறையாக இன்று பதவியேற்க உள்ளார்.
கேரள சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவு மே 2ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி அடைந்தது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பினராயி விஜயன் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இந்த அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனுடன் சேர்த்து 21 அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள்.
இன்று மாலை 3 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் பினராயி விஜயன் கேரளாவின் முதல் அமைச்சராக பதவியேற்கிறார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த விழாவில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி, விஜயனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
