செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

M K Stalin Kanchipuram Government of Tamil Nadu
By Thahir Aug 02, 2023 02:44 AM GMT
Report

செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் 

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

Chief Minister inaugurates in Kanchipuram

அதன் பிறகு 24ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குடும்பத்தலைவிகளிடம் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் பெறப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது.

முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இதனை அடுத்து 3ஆம் கட்டமாகவும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு அவையும் பெறப்படும். இதுவரை மொத்தமாக 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கலைஞர் உரிமை தொகை திட்டமானது மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

Chief Minister inaugurates in Kanchipuram

அதன்படி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.