தமிழக முதல்வர் எடப்பாடி வீட்டை திடீரென முற்றுகையிட்ட 50 பேர்: சென்னையில் பரபரப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை திடீரென 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரியத்தின் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதனைதொடர்ந்து மின் வாரியம் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை கண்டித்து திடீரென இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டை 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
இந்த முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தகுதியானவர்களுக்கு மின்வாரியத்தின் கேங்மேன் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனையடுத்து, அவர்கள் கலைந்து சென்றார்கள். இதனால் முதல்வர் இல்லம் இருக்கும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.