எடப்பாடி தொகுதியில் பேரனோடு சென்று வாக்களித்த முதல்வர் பழனிசாமி!

dmk vote edappadi aiadmk
By Jon Apr 06, 2021 01:29 PM GMT
Report

முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பழனிசாமி, சேலம் மாவட்டம், சிலுவம்பாளையம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு வீட்டிலிருந்து குடும்பத்துடன் நடந்தே வந்த எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் தனது பேரனை கையில் தூக்கிக் கொண்டு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்குமாறு கூறினார்.