‘‘ஆளுநர் உரையில் ஏமாற்றம் உள்ளது முதல்வர் நிச்சயம் நல்ல செய்தி வெளியிடுவார் ’’-ராமதாஸ் நம்பிக்கை!
சட்டப்பேரவையில் முதல்வரின் அறிக்கையில் நான்கைந்து அறிக்கைகளை தவிர வேறு அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
சட்டப்பேரவையில் நாளை முதல் நடைபெறவுள்ள ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது தமிழக மக்கள் எதிர்பார்க்கக்கூடிய, பயனுள்ள பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், நிச்சயம் வெளியிடுவார் என்று நம்புவோம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதே நேரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாததும், சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் நாளை முதல் நடைபெறவுள்ள ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது தமிழக மக்கள் எதிர்பார்க்கக்கூடிய, பயனுள்ள பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், நிச்சயம் வெளியிடுவார் என்று நம்புவோம்' என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.