வாக்கிங் வந்த முதலமைச்சர்...திடீரென பொங்கல் பரிசு கொடுத்ததால் ஷாக்கான ஊழியர்கள்
தமிழகர்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று பொங்கல் பண்டிகை. வரும் 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
இதுமட்டும் இல்லாமல் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் இன்று முதல் நியாய விலைக் கடைகளின் ஊழியர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று வழங்கப்படும்.
அதன் பின்னர் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
மகிழ்சியடைந்த ஊழியர்கள்
அப்போது பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தொல்காப்பியர் பூங்கா ஊழியர்கள் 50 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் புத்தாடையை வழக்கினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .