தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறாரா சசிகலா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சசிகலா அவர்கள் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா அவர்கள் கடந்த மாதம் ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். இவரது வருகை தமிழக அரசியலில் மிகப்பெரும் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக இவரது வருகை எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
ஏனெனில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராதனுக்கு மிக முக்கிய காரணமாக சசிகலா பார்க்கப்படுகிறார். ஆனால் சசிகலா அவர்கள் சிறைக்கு சென்ற பிறகு முற்றிலும் அவருக்கு எதிரானவராக மாறினார் எடப்பாடி பழனிசாமி. மேலும் அவருக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சசிகலா அவர்கள் தற்போது முதலவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்திக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது,"இது தேவையில்லாத ஒரு வதந்தி. மேலும் அதற்கு வாய்ப்பும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.