முதலமைச்சரின் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள் நன்றி, விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூடதொடரின்போது அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பிற்கு பல விவசாய சங்க தலைவர்களும் வரவேற்று, நன்றி தெரிவித்து வருகின்றனர்.
“ஏற்கனவே கொரோன, புயல், அதீத மழை போன்ற விஷயங்களால் மிகவும் கஷ்டத்தில் இருந்த விவசாயிகளுக்கு முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது, இதை நாங்கள் வரவேற்கிறோம்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று தேசிய தென் இந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாகண்ணு தனது மகிழ்சியை வெளிபடுத்தி இருக்கிறார். “முதல்வர் தஞ்சை வரும்போது நாங்கள் அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் மிக முக்கியமானதாக, கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், இன்றைக்கு முதல்வர் அதை சட்டமன்றத்தில் அறிவித்து எங்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் வெறும் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், தேர்தலுக்கு முன்பே இந்த அறிவிப்பை மேற்கொண்டது ஒரு உணர்வுபூர்வமான ஓர் அறிவிப்பு” என்று காவேரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கதலைவர் விமலநாதன் தெரிவித்தார்.
எதிர்பாராத நேரத்தில் வந்த இந்த அறிவிப்பை நாங்கள் பாராட்டி, நன்றி தெரிவித்து, நன்றி தெரிவித்து வரவேற்கிறோம் என்று பி.அர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல பகுதகளில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.