தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் - துணை முதல்வர் தீவிர ஆலோசனை
minister
election
chief
tamilnadu
By Jon
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தேர்தல் பணிகள் தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிறிய கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. டவுள்ளது.