ஊரடங்கு முடிவடையும் நிலையில் ..அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

covid19 lockdown cm stalin
By Irumporai May 20, 2021 07:38 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமலில் உள்ளது.

இந்த நிலையில் தற்போதைய முழு ஊரடங்கு வரும் 24ம்தேதியுடன் முடியவுள்ளது.

ஆகவே வரும் 22ம்தேதி அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

  கடும் கட்டுப்பாடுகளோடு கூடிய ஊரடங்கு  காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனா பரவல் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கை மே 24ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் அதிகமாக உள்ளதால்.

இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.