ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய ஆளுநர்கள் நியமனம்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக தேசிய செயலாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வாழ்த்து
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்," ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.