பாண்டியர் காலத்தில், தமிழ் வளர்க்கப்பட்ட மதுரையில் தற்போது தொழில்துறை வளர்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமசீரான தொழில் வளர்ச்சிக்கு அனைத்து பிரிவினருக்கும் சிறந்த முறையில் வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தோள் கொடுப்போம் மாநாடு
மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்கலந்து கொண்டுள்ளனர்.
#LIVE: தோள் கொடுப்போம் தொழில்களுக்கு - #MSME மாநாட்டில் விருதுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/Oe7PD6p8Q1
— M.K.Stalin (@mkstalin) September 16, 2022
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்மைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது, மதுரையில் இயங்கி வரும் 50,000 சிறு குறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
600 கோடி ஒதுக்கீடு
மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து டைடல் பார்க் அமைக்கிறது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் எளிமையாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வர வேண்டும் என்றும், சமசீரான தொழில் வளர்ச்சிக்கு அனைத்து பிரிவினருக்கும் சிறந்த முறையில் வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.