இளைஞர் அணி தலைவராகி 3 வருடமாக ஒரு நிகழ்ச்சிக்கும் என்னை கூப்பிடல - உதயநிதியை கலாய்த்த முதலமைச்சர்

Udhayanidhi Stalin M K Stalin DMK
By Irumporai Jan 14, 2023 07:40 AM GMT
Report

நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இளைஞரணி செயலி

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்  

மூன்றுவருடமாக அழைக்கவில்லை 

இளைஞர் அணியில் பதவியேற்று மூன்று வருடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக இளைஞரணி சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். ஆனால் இளைஞர் அணித் தலைவர்(உதயநிதி) ஏன் என்னை மூன்று வருடங்களும் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை என கலகலப்பாக கூறினார்.

இளைஞர் அணி தலைவராகி 3 வருடமாக ஒரு நிகழ்ச்சிக்கும் என்னை கூப்பிடல - உதயநிதியை கலாய்த்த முதலமைச்சர் | Chief Minister Apologized Tamil Nadu

உதயநிதியை கண்காணிக்கிறேன் 

ஒருவேளை எனக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளது என்று கருதியும் எனக்கு இடையூறு தரக்கூடாது என்று எண்ணி இருப்பார் என்று நான் எண்ணிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியைகண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் பயிற்சி பாசறை எழுச்சியோடு இளைஞரணி அமைப்பு நடத்தி வருகிறது.

இளைஞர் அணி தலைவராகி 3 வருடமாக ஒரு நிகழ்ச்சிக்கும் என்னை கூப்பிடல - உதயநிதியை கலாய்த்த முதலமைச்சர் | Chief Minister Apologized Tamil Nadu

இந்த விஷயத்தில், உதயநிதியின் தந்தையாக இருந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் உதயநிதியின் தலைவனாக இருந்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.