அம்பேத்கர்.. பகத்சிங் படங்களுக்கு மட்டுமே இனி அனுமதி - முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை

announced Chief Minister photos of former
By Nandhini Jan 26, 2022 03:58 AM GMT
Report

டெல்லியில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்களிலும் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.

இனி அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் வைக்க மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது -

டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரால் நான் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டேன். டாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம், நாட்டிற்காக பெரிய கனவு காண வேண்டும்.

ஏழை, பணக்கார குடும்பம் என்ற பாகுபாடு இல்லாமல், நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் அம்பேத்கரின் கனவு. ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வேண்டும் என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இன்று உறுதியளிக்கிறோம்.

டெல்லியில் ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்கி வருகிறோம். பகத் சிங் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பாதைகள் வேறுபட்டவை, ஆனால் அவர்களின் கனவுகள் ஒன்றே.

இருவரும் சமத்துவம், பாகுபாடு இல்லாத நாட்டைக் கனவு கண்டார்கள், புரட்சியைக் கனவு கண்டார்கள். இன்று அதே புரட்சிதான் எங்களின் கனவாகவும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

அம்பேத்கர்.. பகத்சிங் படங்களுக்கு மட்டுமே இனி அனுமதி - முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை | Chief Minister Announced Photos Of Former