"இது சரியான கட்டுக்கதை, நீதிபதிகளின் நியமனத்தில் நீதித்துறை ஒரு அங்கமே" - தலைமை நீதிபதி என்.வி.ரமணா

chief justice nv ramana talks about justice selection and controversy around it
By Swetha Subash Dec 26, 2021 01:32 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

நீதிபதிகளின் நியமன முறையில் நீதித்துறை மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாக இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனம் குறித்து என்.வி.ரமணா தெரிவித்துள்ள கருத்தின் படி :

“சமீப நாட்களில், நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்கின்றனர் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால், இது சரியான கட்டுக்கதை எனக் கூறிய நீதிபதி என்.வி.ரமணா,

இத்தகையை கதைகளை குறுகிய நோக்கங்களுக்காக சிலர் பயன்படுத்துகின்றனர் குறிப்பாக நியமன முறையைப் பற்றி நன்குணர்ந்த சிலரே அதனை ஊக்கமளித்து வருகின்றனர்.

நீதிபதிகளின் நியமனத்தில் நீதித்துறை ஒரு அங்கமே. அரசின் மற்ற அங்கங்களான, குடியரசுத் தலைவர், மத்திய சட்ட அமைச்சகம், மாநில அரசு, மாநில ஆளுநர், உயர்நீதிமன்ற கொலிஜியம்,

உளவுத்துறை பிரிவு, ஆகியவையும் நியமன முறையில் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரையும், உச்ச நீதிமன்றத்திலும் மாநிலங்களிலுள்ள நீதிமன்றங்களிலுமுள்ள நீதிபதிகளில்,

யாரை ஒருவர் கலந்தாய்வு செய்வது அவசியமெனக் குடியரசுத்தலைவர் கருதுகின்றாரோ அந்நீதிபதிகளுடன் கலந்தாய்வு செய்த பின்பு தன் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையினால் குடியரசுத்தலைவர் அமர்த்துவார்.

 அதாவது, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய குடியரசுத் தலைவர் நியமிப்பார். ஆனால், அவ்வாறு நியமிக்கின்ற போது, நீதிபதிகள் தேர்வுக் குழுவின் (கொலிஜியம்) சிபாரிசுக்கு இணங்கவே குடியரசுத் தலைவர் செயல்படும் என்று நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.