பாமகவில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகி: கட்சியில் குழப்பமா?
ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளராக பாலு அறிவிக்கப் பட்டுள்ளதால், வைத்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியுள்ளது.
பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியது. 23 இடங்களில் பாமக போட்டியிட உள்ளது. ஜெயங்கொண்டம் தொகுதியில் வழக்கறிஞர் பாலு, ஆற்காட்டில் கே.எல். இளவழகன், உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருக்கிறது.
ஜெயங்கொண்டம் தொகுதியை வைத்திஎதிர்பார்த்திருந்தார், வைத்தி அவருக்கு கிடைக்காததால், தற்போது பாமகவில் இருந்தும், வன்னியர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ,கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள நிரவாகி விகலகியிருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.