தேர்தல் செலவுகளை கண்காணிப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

election chief leader
By Jon Mar 09, 2021 12:33 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுகளை கண்காணிப்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக சிறப்பு செலவின பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிகவரித் துறை, துணை ராணுவப் படை, காவல்துறை, உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். G Pay, Phone Pay போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது