மீண்டும் ஊரடங்கா? முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள், பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் இன்று முதல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய ஆலோசனைக்குப் பின்னர் முதல்வரிடம் இருந்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கருதப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.