‘‘ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வருகிறது’’ : கிண்டல் செய்யும் சிதம்பரம்
இந்த முறை தேர்தல் களத்தில் சமூக வலைத்தளமும் சூடு பிடித்துள்ளது, அந்த வகையில் ப.சிதம்ப்ரம் தனது ட்விட்டர் பதிவில். மோடி தனக்கு பல விஷயங்களை கற்றுத் தந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வேளாண் சட்டத்தையும், குடியுரிமை சட்டத்தையும் ஆதரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தாரா?. மேலும் முதல் பழனிசாமியின் பேச்சை, கேட்டால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என பதிவிட்டுள்ள சிதம்பரம் OPS (துணை முதல்வர்)கூறியுள்ளார் பாஜக அரசும் அஇஅதிமுக அரசும் சிறுபான்மை சமுதாயங்களைப் பாதுகாத்துள்ளது என்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிப் பாதுகாத்தீர்களா? என தனது ட்வீட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார்.
இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது!
— P. Chidambaram (@PChidambaram_IN) March 26, 2021
EPS சொன்னார், மோடி எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தந்தார்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் வேளாண் சட்டங்களையும் எப்படி ஆதரிப்பது என்று கற்றுத் தந்தாரா?