இலங்கை தீர்மானம் புறக்கணிப்பு.. பாஜக தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகம்: ப. சிதம்பரம்

india tamil people bjp Chidambaram
By Jon Mar 24, 2021 06:16 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில்:

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், இது ஒன்றே போதும், அதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து தமிழக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு செயத பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும்.

வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும். என தெரிவித்துள்ளார்.