பேசாமல் தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? சிதம்பரம் வேதனை

india election Chidambaram
By Jon Mar 13, 2021 12:23 PM GMT
Report

கட்சி என்றால் கடமை உணர்வோடு உழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை 25 சீட் கூட கிடைக்காது. காரைக்குடியில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி, புதுவயல் பூத் கமிட்டி ஊழியர் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .

காங்கிரஸ் தொண்டர்கள் தற்போது சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலும், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை.

கூட்டத்திற்கு அதிக பொறுப்பாளர்கள் வராததால் தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? என ப.சிதம்பரம் வேதனையுடன் தெரிவித்தார்.