‘எஜமான்’ பட பாணியில்... வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணி போல் நடித்த பெண் - மருத்துவர்கள் அதிர்ச்சி..!
சிதம்பத்திரத்தில் குடும்பத்திற்கு பயந்து போன இளம் பெண் ஒருவர் கர்ப்பிணிப்போல் நடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணி போல் நடித்த பெண்
சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடந்து இரு முறை கரு கலைந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் 3-வது முறையாக மீண்டும் கர்ப்பமானார். ஆனால், அந்த கருவும் கலைந்து விட்டது.
இதனால், அப்பெண் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் பயந்துள்ளார். இதனையடுத்து, வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு 9 மாதமாக கர்ப்பிணிப் போல் நடித்து வந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்
9 மாதம் நிறைவடைந்ததையடுத்து, பிரவசத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணை மருத்துவர்கள் சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, மருத்துவர்களிடம் அப்பெண் நான் கர்ப்பம் இல்லை. என் கரு கலைந்து விட்டது. குடும்பத்திற்கு பயந்து நான் கர்ப்பிணியாக நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிய மருத்துவர்கள் இது குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் எடுத்துக்கூறுவதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே வெளியே வந்த அப்பெண், தன் குடும்பத்தினரிடம் நான் கழிவறைக்கு செல்லும் போது குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மருத்துவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர்கள் நடந்ததை கூறினர்.
மேலும், இது தொடர்பாக மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினரிடமும் உரிய அறிவுரைகளை கூறி, அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
குடும்பத்திற்கு பயந்து போன இளம் பெண் கர்ப்பிணிப்போல் நடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.