இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது: மோடியினை கிண்டல் செய்யும் சிதம்பரம்

india modi chidambaram
By Jon Mar 09, 2021 12:12 PM GMT
Report

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன் படி, மாதம் ஒரு முறை சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை ஒரு மாதத்திற்கு 2 அல்லது 3 முறை கூட உயர்த்தப்படுகிறது.

அன்றாட தேவைகளில் ஒன்றான சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.881க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் மே மாதத்தில் விலை கணிசமாக குறைந்து ரூ.569க்கு விற்பனையானது.

இந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து தற்போது ரூ.820 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், 2014ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்ற போது LPG சிலிண்டரின் விலை ரூ 410. இன்று விலை ரூ 820. மோடி ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது என ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.