வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் - 4 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

Cruel Chidambaram dowry 4 months pregnant Female suicide 4 மாத கர்ப்பிணி தற்கொலை
By Nandhini Feb 10, 2022 03:46 AM GMT
Report

சிதம்பரத்தில் வரதட்சணை கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராதிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ராதிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கணவர் சதீஷ் 5-வது மாதம் ஆகிறது. ஆதனால், உங்கள் வீட்டில் சீர்வரிசை செய்ய வேண்டும் என்று ராதிகாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், ராதிகாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமையும் செய்து வந்துள்ளார்.

இதனால், ராதிகா மனமுடைந்து வேதனையில் இருந்து வந்துள்ளார். மிகவும், வாழ்க்கையில் விரக்தியடைந்த ராதிகா, சம்பவத்தன்று வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரம் ராதிகா வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்காததால், உடைத்துக் கொண்டே உள்ளே சென்று பார்த்தபோது, ராதிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக ராதிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணமான 5 மாதத்தில் ராதிகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் - 4 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் | Chidambaram Dowry