‘‘தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர்’’ - ப.சிதம்பரம் கிண்டல்!

covid19 vaccine india chidambaram
By Irumporai Apr 18, 2021 07:52 AM GMT
Report

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை, நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பி.,யுமான ப.சிதம்பரம் கிண்டலாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் உய்ர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளன. ஆனாலும், சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், தடுப்பூசிக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லைஎனவும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்பி.,யும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டூவிட்டர் பக்கத்தில்: மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை என்கிற அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மறுக்கிறார்.

மத்திய அமைச்சரை நம்புங்கள். தடுப்பூசிகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்திற்கும் பஞ்சமில்லை; நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர்.

மேற்குவங்கத்தை கைப்பற்றி பா.ஜ.,வின் பேரரசுடன் இணைக்கும் அவசர யுத்தத்திற்கு மத்தியில் கொரோனாவிற்கு சிறிது நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி, என கிண்டலாக பதிவிட்டுள்ளார் .