‘‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா மளிகை கடனையும் முதல்வர் ரத்து செய்திருப்பார்’’ : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
இன்னும் 30 நிமிடங்கள் ஒதுக்கி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தால் மக்கள் வாங்கிய மளிகை கடன், கைமாத்து கடனை கூட முதலமைச்சர் ரத்து செய்திருப்பார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது.இன்னும் 30 நிமிடங்கள் ஒதுக்கி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தால் மக்கள் வாங்கிய மளிகை கடன், கைமாத்து கடனை கூட முதலமைச்சர் ரத்து செய்திருப்பார் என விமர்சனம் செய்தார். மேலும், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. பாஜகவை தமிழகத்தில வேரூன்றவிடாமல் திமுகவிற்கு ஆனி வேராக இருப்பது காங்கிரஸ் தான்.
இதனை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறிய சிதம்பரம்.
எங்களுக்கு 25 தொகுதி கொடுத்ததால் நாங்கள் வருத்தப்படவில்லை. திமுகவின் ஒத்துழைப்போடு 25 தொகுதியையும் வென்றெடுப்போம் என சிதம்பரம் பேசினார்.