கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசுக்கு தோல்விதான்: சிதம்பரம் வெளியிட்ட கணக்கு ?

vaccine modi central chidambaram
By Jon Mar 18, 2021 12:59 PM GMT
Report

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பதிவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இது குறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா? 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன்.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கொரோனாதான் மக்களை வெல்கிறது. மக்களுக்கு தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். என தனது ட்வீட்டர் பதிவில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.