சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியை கடந்த ஆண்டு அரசு கல்லூரியாக தமிழக அரசு அறிவித்து தற்போது கடலூர் மாவட்ட மருத்துவமனையாக இயங்கி வருகின்றது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு முடித்து விட்டு பயிற்சி மருத்துவராக மருத்துவ கல்லூரியில் 134 மாணவர்களும் பல் மருத்துவ கல்லூரியில், 134 மாணவர்களும் பல் மருத்துவ கல்லூரியில் 71 பயிற்சி மருத்துவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 25 ஆயிரம் போல், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிவரும் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை கல்லூரி நிர்வாகம் உடனடியாக விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
உரிமைக்கு போராடினால், அடக்கு முறையை கையாளும் நிர்வாகத்தை கண்டிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் பயிற்சி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.