இளைஞர்களுக்கு ராணுவ பணி வாய்ப்பை மறுக்கிறது அக்னிபாத் திட்டம் : ப.சிதம்பரம்
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார்.
கலவரத்தை கிளப்பிய அக்னி பத்
இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த அமைப்பிற்கு எதிர் கட்சி தலைவர்கள் கடும் கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.
அக்னிபத் ஆபத்து
இந்த சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களுக்கு ராணுவ பணி வாய்ப்பை மறுப்பதாக அக்னிபாத் திட்டம் உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அக்னிபாத் என்ற 4 ஆண்டு கால ராணுவ பணி திட்டம் ஒன்றிய அரசால் அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்தி விளைவுகளை பார்த்த பின்பே அறிவித்து இருக்க வேண்டும்; இந்த திட்டம் சர்ச்சைக்குரியது என்பதோடு பல ஆபத்துகளையும் உள்ளடக்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்