கோழியை பிடிக்கச் சென்று 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞர்...! - பரபரப்பு சம்பவம்
கோழி பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
50 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோழிகளை இளைஞர் ஒருவர் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கோழிகள் அங்கிருந்த 50 அடி கிணற்றில் விழப் பார்த்தன.
அந்த நேரத்தில் இளைஞர் கோழிகளை மீட்க முயன்றபோது தடுமாறி 50 அடி ஆழ தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் கிணற்றை எட்டிப் பார்த்தனர்.
கிணற்றில் இளைஞர் ஒருவர் விழுந்ததைப் பார்த்து உடனே தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
கோழி பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.