தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்.., விலை உயரக்கூடும்
ஜூலை 31 முதல் தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கறிக்கோழி விற்பனை நிறுத்தம்
தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
விற்பனைக்கு அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறையை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் மூலம் அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை ஏற்காததால் போராட்டமாக கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள், அரசு விதிமுறைகளை மீறி அதிக தீவனம் வழங்குவதால் கோழிகளின் கழுத்து மற்றும் வயிற்றில் தீவனம் தேங்குவதாகவும், இதனால் போக்குவரத்தின் போது கழிவுகள் வெளியேறி சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப்பட்டால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு, வரும் நாட்களில் கோழி இறைச்சி விலை மேலும் உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை IBC Tamil
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan