கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோழி இலவசம்
Covid vaccine
Indhonesia
By Petchi Avudaiappan
இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக கோழி வழங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள சிபனாஸ் பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்தனர். இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள் அனைவருக்கும் கோழி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.
இதையடுத்து ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு கோழிகளை வாங்கிச் சென்றனர்.