பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை - அமைச்சர் ராஜ்மோகன்
தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை அவர் கேட்டறிந்தார். அப்போது பேசிய அமைச்சர்,
கல்வித் துறையில் புதிய முயற்சிகள்
முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
மேலும், ஆசிரியர் சங்கங்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை கண்காணிக்கும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மனுக்களின் நிலை மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் புதிய முயற்சியாக வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
மதிய உணவு திட்டத்தை காமராஜர் தொடங்கியதாகவும், அதனை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தியதாகவும், கலைஞர் அதில் முட்டையை சேர்த்ததாகவும் குறிப்பிட்ட அவர், அதே வரிசையில் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்த விவகாரத்தில், தங்களது அரசு தமிழ் தாய் வாழ்த்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan