மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்த கொடூரக் கணவன்...!
சத்தீஸ்கரில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்த கொடூரக் கணவனின் செயலால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் பவன் தாக்கூர். இவருடைய மனைவி சாஹு. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்ட பவன் அடிக்கடி மனையிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீடு முழுவதும் துர்நாற்றம் வீசவே, அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பவன் வீட்டை சுற்றி ஆய்வு செய்தனர். அப்போது, தண்ணீர் தொட்டியிலிருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த போலீசார் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீர் தொட்டிக்குள் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் பவனை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், என் மனைவி மேல் சந்தேகம் இருந்தது. இதனால் அடிக்கடிக்கு சண்டை வரும்.
மீண்டும் சண்டை வந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டேன். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
