நிலக்கரியை தேடும்போது திடீரென குழியில் விழுந்த 3 பேர் உயிரிழப்பு..!

Chhattisgarh Accident Death
By Nandhini Jan 31, 2023 01:57 PM GMT
Report

ராய்ப்பூரில் நிலக்கரியை தேடி கொண்டிருந்த போது திடீரென குழியில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாம்பல் குவியலில் சிக்கி 3 பேர் பலி

இன்று சட்டீஸ்கர், ராய்ப்பூரில் உள்ள சிலாதாரா பகுதியில் நிலக்கரியை தேடிக்கொண்டிருந்த போது, திடீரென நிலக்கரி சாம்பல் குவியலில் குழியில் விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 1 சிறியவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் சக்ரா கிராமத்தில் வசிக்கும் மோஹர் பாய் மன்ஹரே (50), பஞ்சோ கஹாரே (32) மற்றும் புனித் குமார் மன்ஹரே (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அபிஷேக் மகேஸ்வரி கூறுகையில்,

“சக்ரா கிராமத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் நிலக்கரி சாம்பல் குப்பைகளிலிருந்து நிலக்கரியை பிரித்தெடுத்தனர்.

அவர்கள் நிலக்கரி எடுக்கும் இடம் ஒரு சுரங்கப்பாதை போலானது. "சுரங்கப்பாதை நீளமாகிவிட்டது. இதன் காரணமாக திடீரென அது உள்ளே நுழைந்த 5 பேர் மீது திடீரென சாம்பல் குவியல் விழுந்தது. அந்த குவியலில் அவர்கள் புதைந்தனர். 

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். தற்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்களுக்கு தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய அவர்களை மீட்டோம் என்றார்.

இது தொடர்பாக நில உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

chhattisgarh-three-killed-in-raipur-spit-collapse